ஸ்டான் லீ
அமெரிக்க காமிக் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
ஸ்டான்லி மார்ட்டின் லிபர் (ஆங்கில மொழி: Stanley Martin Lieber) (28 திசம்பர் 1922 - 12 நவம்பர் 2018) என்ற இயற்பெயரை உடைய ஸ்டான் லீ[1] என்பவர் ஒரு அமெரிக்க வரைகதை புத்தக எழுத்தாளர், ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மார்வெல் காமிக்சு என்ற பெயரில் வணிகம் செய்து வரும் நிறுவனத்தின் முதன்மை படைப்பாற்றல் தலைவராக இவர் இருந்தார். ஒரு சிறிய பதிப்பகமாக இருந்த இந்நிறுவனம் வரைகலை துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பல்லூடக நிறுவனமாக விரிவடைய இவர் பெரும்பங்களித்தார்.
விரைவான உண்மைகள் ஸ்டான் லீ, பிறப்பு ...
ஸ்டான் லீ | |
---|---|
2014 இல் லீ | |
பிறப்பு | ஸ்டான்லி மார்ட்டின் லிபெர் (1922-12-28)திசம்பர் 28, 1922 நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | நவம்பர் 12, 2018(2018-11-12) (அகவை 95) கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
துறை (கள்) | படப்புத்தக (காமிக் புத்தகம்) எழுத்தாளர், ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் தயாரிப்பாளர் |
விருதுகள் |
|
கையெழுத்து | |
மூடு