வெர்டிகோ (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
வெர்டிகோ (Vertigo) என்பது 1958 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை ஆல்பிரட் ஹிட்ச்காக் தயாரித்து இயக்கி இருந்தார். இது 1954ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் ஜேம்ஸ் ஸ்டுவர்ட் நடித்திருந்தார். வெளியிடப்பட்டபோது இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் தற்போது அடிக்கடி ஒரு செம்மையான ஹிட்ச்காக் திரைப்படமாகக் கருதப்படுகிறது. அவரது திரை வாழ்க்கையில் சிறந்த திரைப்படமாகவும் கருதப்படுகிறது. எக்காலத்திலும் தயாரிக்கப்பட்ட சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இந்தத் திரைப்படம் அடிக்கடி இடம்பெறுகிறது.[4]
விரைவான உண்மைகள் வெர்டிகோ, இயக்கம் ...
வெர்டிகோ | |
---|---|
சால் பாசின் திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | ஆல்பிரட் ஹிட்ச்காக் |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ்[lower-alpha 1] |
வெளியீடு | மே 9, 1958 (1958-05-09) |
ஓட்டம் | 2:08 மணி நேரம் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$2.5 மில்லியன் (₹17.9 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$7.3 மில்லியன் (₹52.2 கோடி)[3] |
மூடு