வனமகன் (திரைப்படம்)
ஏ. எல். விஜய் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
வனமகன் (திரைப்படம்) (ஆங்கிலம்: Vanamagan)[1] 2017ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை, ஏ. எல். அழகப்பன் என்பவர் தாயாரித்து வெளிட்டுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சாயிஷா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, வருண், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[2] ஹாரிஸ் ஜெயராஜ் என்பவர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பு 2016 செப்டம்பரில் தொடங்கியது. 23 ஜூன் 2017 அன்று வெளியிடப்பட்டது.[3]