வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைகழகம் (North Dakota State University - NDSU) என்பது ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தின் பார்கோ நகரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பல்கலைக்கழகம் ஆகும். 1890 ஆம் ஆண்டில் இக்கல்விக்கழகம் வடக்கு டகோட்டா வேளாண்மைக் கல்வி நிலையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 258 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழக வளாகத்தில் ஏறத்தாழ 14,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் முழுநேரப் படிப்பில் இங்கு ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 55% ஆண்களும், 45% பெண்களும் உள்ளனர்.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
குறிக்கோளுரை | நிலத்திற்காகவும் அதன் மக்களுக்காகவும் |
---|---|
வகை | பொது, நிலமானியப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1890 |
கல்வி பணியாளர் | 871 |
நிருவாகப் பணியாளர் | 1,614 |
மாணவர்கள் | 14,399 |
அமைவிடம் | பார்கோ , , |
வளாகம் | நகர பகுதி - பார்கோ வளாகம்: 258 ஏக்கர்கள் (1.0 கிமீ²) |
நிறங்கள் | மஞ்சள் மற்றும் பச்சை |
விளையாட்டுகள் | 14- NCAA பிரிவு 1 |
சுருக்கப் பெயர் | பைசன் |
நற்பேறு சின்னம் | தண்டர் |
சேர்ப்பு | வடக்கு டகோட்டா பல்கலைக்கழக அமைப்பு |
இணையதளம் | www.ndsu.edu |
![]() |
மூடு