மைக்கேல் பி. ஜோர்டான்
From Wikipedia, the free encyclopedia
மைக்கேல் பக்காரி ஜோர்டான்[1] (ஆங்கில மொழி: Michael Bakari Jordan) (பிறப்பு: பெப்ரவரி 9, 1987)[2] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் புரூட்வேல் ஸ்டேஷன் (2013), கிரீட் (2015) மற்றும் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் பான்தர் (2018)[3] போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.[4][5][6][7] இவர் தி வயர் (2002) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
மைக்கேல் பி. ஜோர்டான் | |
---|---|
பிறப்பு | மைக்கேல் பக்காரி ஜோர்டான் பெப்ரவரி 9, 1987 (1987-02-09) (அகவை 37) சாண்டா அனா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1999–இன்று வரை |
2020 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகையால் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவர் எனவும் மற்றும் கவர்ச்சியான மனிதர்[8] எனவும் பட்டியல் செய்து வெளியானது.[9] அதே ஆண்டில், 21 ஆம் நூற்றாண்டின் 25 சிறந்த நடிகர்களின் பட்டியலில் த நியூயார்க் டைம்ஸ் அவரை 15 இடத்தில் பட்டியல் இட்டது.[10]