மலச்சிக்கல்
From Wikipedia, the free encyclopedia
மலச்சிக்கல் (Constipation; costiveness[1]) வலிமலக்கழிப்பு (dyschezia)[2] என்பது மலங்கழிப்புகள் அரிதாகவும், மலத்தை வெளியேற்றுவதற்கு கடினமாகவும் உள்ள நிலையைக் குறிக்கும்[2]. இது, மனிதனுக்கு ஏற்படும் ஓர் உடல் உபாதை ஆகும். உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. வலியுடன் மலங்கழிப்பதற்கு மலச்சிக்கலே பொதுவானக் காரணமாக அமைகிறது. கடும் மலச்சிக்கல், நோய்முதலறியா மலச்சிக்கல் (obstipation) (மலம், வாயு (குசு) வெளியேற்ற முடியாத நிலை) மற்றும் மலக்கட்டு (fecal impaction) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
ஒரு குழந்தையின் மலச்சிக்கலை எக்ஸ் கதிர்கள் துணைக்கொண்டு பார்க்கும் படம். வளையங்கள் மலப்பொருள்கள் (அ) மலக்கட்டிகள் உள்ள பகுதிகளைக் குறிக்கின்றது. மலமானது ஒளி உடுருவாத வெண் பகுதியாக, கருமையான குடல்வாயு சூழப்பட்டுக் காணப்படுகிறது. | |
ஐ.சி.டி.-10 | K59.0 |
---|---|
ஐ.சி.டி.-9 | 564.0 |
DiseasesDB | 3080 |
MedlinePlus | 003125 |
ஈமெடிசின் | med/2833 |
MeSH | D003248 |
மலச்சிக்கல் சாதாரணமாகக் காணப்படும் ஒன்றாகும்; பொதுவான மக்கள்தொகையில் மலச்சிக்கலின் விழுப்பாடு (நிகழ்வு) 2-30 சதவிகிதம் உள்ளது[3].
மலச்சிக்கல் பல்வேறு காரணங்களைக் கொண்ட அறிகுறியாகும். இக்காரணங்கள் இருவகைப்படும்: தடுக்கப்பட்ட மலங்கழித்தல் மற்றும் பெருங்குடல் மெதுவாக மலம் கடத்துவது [பெருங்குடல் குறையசைவு (hypomobility)]. மூன்றாம் நிலை பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏறத்தாழ ஐம்பது சதவிகித நோயாளிகளை மலச்சிக்கலுக்கு மதிப்பீடு செய்ததில் தடுக்கப்பட்ட மலங்கழித்தல் முக்கிய காரணமாக இருப்பதுக் கண்டறியப்பட்டது.[3] தடுக்கப்பட்ட மலங்கழித்தல் வகையான மலச்சிக்கல் இயக்கமுறை மற்றும் செயற்பாட்டுக் காரணங்களைக் கொண்டுள்ளது. பெருங்குடல் குறையசைவு மலச்சிக்கலுக்கான காரணங்களாக உணவுவகை, வளரூக்கிகள், மருந்துகளின் பக்கவிளைவுகள், அடர் உலோக நச்சுத்தன்மை ஆகியவற்றைக் கூறலாம்.
மலச்சிக்கலுக்கு உணவுப் பழக்கவழக்கங்களில் மாறுதல்களைக் கொண்டு வருதல், மலமிளக்கிகளை உபயோகித்தல், மலக்குடலைக் கழுவுவல், உயிரியப் பின்னூட்டம் (biofeedback), அறுவை சிகிச்சை ஆகிய சிகிச்சை முறைகள் உள்ளடங்கும்.
சுத்திகரிக்கப்பட்ட மாவுசத்து பொருளான மைதா, சோள மாவு மற்றும் ஐஸ்கிரீம் வெள்ளை சர்க்கரை போன்றவற்றை மலச்சிக்கல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் படிக்க