முக்குலத்தோரில் ஒரு சாதியினர் From Wikipedia, the free encyclopedia
மறவர் (Maravar) (மறவன் மற்றும் மறவா எனவும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் தென் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்குலத்தோர்களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து முக்குலத்தோர் எனப்படுவர்.
பூலித்தேவன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தென் தமிழகம் | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
முக்குலத்தோர், பாளையக்காரர்கள், குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் வருவோர். |
தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருள். முற்காலத்தில் மக்கள் செய்யும் தொழிலினை வைத்தே அவர்தம் சாதி வரையறுக்கப்பட்டது. முற்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே இருந்தது. பெரும்பாலும் தமது வீரத்திற்காகவே அறியப்பட்ட இக்குலத்தினர் காலாட்படையில் பெரும்பங்காற்றி போர் புரிந்தமையால் மறவர் எனப்பெயர் பெற்றனர்.[சான்று தேவை]
தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், சேர்வை, ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்டோர் சீர்மரபினர் பிரிவில் உள்ளனர்.[1]
செவிவழி கருத்துகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் இராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே "சேதுபதி மன்னர்" என்ற பெயரும் பெற்றார் .
ராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும் ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி ராமநாதபுரம் பகுதியே என்பதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருதப்படுகிறனர். அந்த வகையில் மறவர்கள் ராமநாதபுரத்திலும் இருந்திருக்கின்றனர்.
முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் பூலித்தேவன் மறவர் இனத்தில் தொன்மையான செம்ம நாட்டு மறவர் குலத்தை சேர்ந்தவர்.[2] செம்ம நாட்டு மறவர்கள் தமக்கை மகளைத் திருமணம் செய்யும் வழக்கம் உடையவர்கள். செம்ம நாட்டு மறவரினப்பெண்கள் மூக்குத்தி அணியும் வழக்கம் உள்ளவர்கள்.
மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின் தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.