பொன் மீன்
வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மீன் / From Wikipedia, the free encyclopedia
வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் நன்னீர் மீன்களில் பொன்மீன் (Gold Fish) எனப்படும் மீன் மிகப் புகழ்பெற்றதாகும். சைபிரினியா (Cyprinidae) எனும் கார்ப் (Carp) குடும்பத்தைச் சேர்ந்த இம்மீனினத்தின் விலங்கியல் பெயர் கராசியஸ் ஒராட்டஸ் (Carassius auratus) என்பதாகும். இந்த இனம் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் காணப்படுகின்ற கராசியஸ் வெல்கரிஸ் (Carassius vulgaris) எனும் மீனினத்திலிருந்தே தோன்றியிருக்கிறது.