பெனடிக்ட் வோங்
From Wikipedia, the free encyclopedia
பெனடிக்ட் வோங் (ஆங்கில மொழி: Benedict Wong) (பிறப்பு: 3 சூலை 1971) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்து வருகின்றார். இவர் நெற்ஃபிளிக்சு என்ற இணையத்தளத்தில் 'மார்கோ போலோ' (2014-2016) என்ற தொடரில் குப்லாய் கான் என்ற கதாபாத்திரத்திலும்[1][2], 2015ஆம் ஆண்டு த மார்சன் என்ற திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆவார்.[3]
விரைவான உண்மைகள் பெனடிக்ட் வோங், பிறப்பு ...
பெனடிக்ட் வோங் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 3 சூலை 1971 (1971-07-03) (அகவை 52) எக்குலெஸ், கிரேட்டர் மான்செஸ்டர் இங்கிலாந்து | ||||||||||||
பணி | நடிகர் | ||||||||||||
செயற்பாட்டுக் காலம் | 1992–அறிமுகம் | ||||||||||||
Chinese name | |||||||||||||
பண்டைய சீனம் | 黃凱旋 | ||||||||||||
நவீன சீனம் | 黄凯旋 | ||||||||||||
| |||||||||||||
மூடு
இவர் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016) [4] என்ற திரைப்படத்தில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாப்பாத்திரமான வோங் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[5] [6]மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[7] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.