பாலியல் துன்புறுத்தல்
From Wikipedia, the free encyclopedia
பாலியல் துன்புறுத்தல் (Sexual harassment) என்பது வெளிப்படையான அல்லது மறைமுகமான பாலியல் செயல்களைச் செய்வதனை உள்ளடக்கிய ஒரு வகை துன்புறுத்தல் ஆகும். [1] பாலியல் துன்புறுத்தல் வாய்மொழி மீறல்கள் முதல் பாலியல் முறைகேடு அல்லது தாக்குதல் வரை பல செயல்களை உள்ளடக்கியது ஆகும்.[2] பணியிடம், வீடு, பள்ளி, தேவாலயங்கள் போன்ற பல்வேறு சமூக அமைப்புகளில் தொல்லைகள் ஏற்படலாம். துன்புறுத்துபவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் எந்த பாலினம் அல்லது பாலினத்தவராக இருக்கலாம். [3]
பெரும்பாலான நவீன சட்ட சூழல்களில், பாலியல் துன்புறுத்தல் என்பது சட்ட விரோதமானதாகக் கருதப்படுகிறது. பாலியல் தொல்லைகள் என்பதனைப் பொறுத்தவரை பொதுவாக சிறிய கிண்டல்கள், வெளிப்படையான கருத்துகள் அல்லது தனிமையில் இருக்கும் சமயத்தில் எல்லை மீறாத சம்பவங்கள் ஆகியன இதில் வராது.[4]
பணி செய்யுமிடத்தில் ஒரு முதலாளியால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் என்பது சட்டவிரோத வேலைவாய்ப்பு பாகுபாடு ஆகும் . பல வணிகங்கள் அல்லது நிறுவனங்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்து ஊழியர்களைப் பாதுகாப்பது சட்ட முடிவெடுப்பது ஆகியன தற்போது முக்கிய இலக்குகளாக மாறியுள்ளன.