பழைய தில்லி
From Wikipedia, the free encyclopedia
பழைய தில்லி (Old Delhi), இந்தியாவின் தில்லி மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றான மத்திய தில்லி மாவட்டத்தில் உள்ளது. தற்போதைய பழைய தில்லி நகரத்தை நிறுவியவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் ஆவார். அவரது ஆட்சிக் காலத்தில் இந்நகரம் ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது. பழைய தில்லியை மதில் சுவர்களால் சூழப்பட்ட நகரம் என்று அடைமொழியுடன் அழைப்பர்.
விரைவான உண்மைகள் பழைய தில்லி ஷாஜகானாபாத், நாடு ...
பழைய தில்லி
| |
---|---|
கோட்டை நகரம் | |
ஆள்கூறுகள்: 28°39′39″N 77°13′48″E | |
நாடு | India |
மாநிலம் | மத்திய தில்லி மாவட்டம் |
மூடு
பழைய தில்லி நகரம் செங்கோட்டை, ஜும்மா மசூதி, திகம்பர சமணக் கோயில், சாந்தினி சவுக், குரு தேக் பகதூர் குருத்துவாரா, தோட்டங்கள், நினைவுக் கட்டிடங்கள் போன்ற வரலாற்று புகழ் பெற்ற கட்டிடங்களைக் கொண்டது.