நவுரூஸ்
From Wikipedia, the free encyclopedia
நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு ஆகும். இந்தச் சொல்லுக்கு புது நாள் என்று பொருள்[1][2] இந்த புத்தாண்டு விழா கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும், தென்மேற்கு ஆசியா, நடு ஆசியா, காக்கேசியா, கருங்கடல், பால்கன் குடா பகுதிகளிலுள்ள ஈரானியரும் பிற மக்களும் கொண்டாடுகின்றனர்.[3][4][5][6][7][8][9][10][11] இரானிய நாட்காட்டியின் முதல் மாதத்தின் முதல் நாள் உதயமாவதை இப்புத்தாண்டு உணர்த்துகிறது.[12]
இந்த புத்தாண்டு மார்ச்சு இருபத்தொன்றாம் நாளோ அதற்கு முந்தைய நாளிலோ, அடுத்த நாளிலோ தொடங்கும். இப்பண்டிகை சரத்துஸ்திர சமயத்தைப் பின்பற்றும் இரானியருடையது என்றாலும், சமயச் சார்பின்றி பலரும் கொண்டாடுகின்றனர்.[13]
இப்புத்தாண்டின் முதல் நாள் கீழ்க்காணும் நாடுகளில் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆப்கானித்தான் (மார்ச்சு 21)
- அல்பேனியா (மார்ச்சு 22)
- அசர்பைஜான் (மார்ச்சு 20 முதல் மார்ச்சு 26 வரை, 7 நாட்கள்)[14][15]
- சியார்சியா[16]
- ஈரான் (மார்ச்சு 20 முதல் 24 வரை 5 நாட்கள்; பள்ளிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை)[17]
- ஈராக் ( ஈராக்கிய குர்திஸ்தான்)(21 March)[18]
- கசக்கஸ்தான் (மார்ச்சு 21 முதல் மார்ச்சு 24 வரை, 4 நாட்கள்)[19]
- கொசோவோ (மார்ச்சு 21)
- கிர்கிசுத்தான் (மார்ச்சு 21)[20][21]
- பயான் - ஓல்கீ, மங்கோலியா (மார்ச்சு 22)
- தஜிகிஸ்தான் (மார்ச்சு 20 முதல் 23 வரை, 4 நாட்கள்)[22][23]
- துருக்மெனிஸ்தான் (மார்ச்சு 21 முதல் மார்ச்சு 22 வரை, 2 நாட்கள்)[24]
- உசுபெக்கிசுத்தான் (மார்ச்சு 21)[25]
இப்புத்தாண்டின் முதல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்க கனேடிய பாராளுமன்றம் சட்டமியற்றியது.[26][27]