தாய்பெய் பெரிய பள்ளிவாசல்
From Wikipedia, the free encyclopedia
தாய்பெய் பெரிய பள்ளிவாசல் (சீனம்: 台北清真寺; பின்யின்: Táiběi Qīngzhēnsì; Pe̍h-ōe-jī: Tâi-pak Chheng-chin-sī) தாய்வானில் உள்ள பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற பள்ளிவாசல் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 2,747 சதுர கிலோமீற்றர்கள்.[1] இது தாய்பெய் நகரின் தான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தாய்வான் நாட்டிலுள்ள கட்டிடங்களில், மிக முக்கிய இசுலாமியக் கட்டிடக் கலை எனக் கருதப்படுகிறது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக, 1999 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் நாள் அன்று தாய்பெய் நகர அரசினால் அறிவிக்கப்பட்டது.[2]