ஜோ சைமன்
From Wikipedia, the free encyclopedia
ஜோசப் ஹென்றி சைமன் (ஆங்கில மொழி: Joseph Henry Simon) (11 அக்டோபர் 1913 - 14 திசம்பர் 2011) என்பவர் ஒரு அமெரிக்க வரைகதை புத்தக எழுத்தாளர், வரைகதை கலைஞர், படத்தொகுப்பாளர், எழுதுகோலாளர், மைதீட்டுபவர், வெளியீட்டாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
விரைவான உண்மைகள் ஜோ சைமன், பிறப்பு ...
ஜோ சைமன் | |
---|---|
சைமன் ஒரு ரசிகருடன் 2006 நியூயார்க் | |
பிறப்பு | ஹிமி சைமன் (1913-10-11)அக்டோபர் 11, 1913 இரோசெச்டர், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | திசம்பர் 14, 2011(2011-12-14) (அகவை 98) நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
குடிமகன் | அமெரிக்கர் |
துறை (கள்) | வரைகதை கலைஞர், எழுத்தாளர், எழுதுகோலாளர், மைதீட்டுபவர், வெளியீட்டாளர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் |
Pseudonym(s) | கிரிகோரி சைக்ஸ், ஜான் ஹென்றி |
கவனிக்கத் தக்க வேலைகள் | கேப்டன் அமெரிக்கா, சண்டை அமெரிக்கன், சிக், யூங் ரொமான்ஸ், பிளை |
Notable collaborations | ஜாக் கிர்பி |
துணை | ஹாரியட் ஃபெல்ட்மேன் |
மூடு
இவர் 1930-1940 களில் வரைகதை புத்தகங்களின் பொற்காலங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களை உருவாக்கினார் அல்லது இணை உருவாக்கினார். மார்வெல் காமிக்ஸ் நிறுவனம் உருவாகுவதற்கு முன்பு டைம்லி காமிக்ஸின் முதல் ஆசிரியராக பணியாற்றினார். இவர் கலைஞர் ஜாக் கிர்பியுடன் இணைத்து புகழ் பெற்ற கேப்டன் அமெரிக்கா என்ற மீநாயகன் கதாபாத்திரத்தை உருவாக்கினார்.[1] மேலும் டிசி காமிக்ஸில் 1940 களிலும் பணியாற்றியுள்ளார்.