சிந்தசுதா பண்பாடு
தெற்கு உரால் மலைகளின் வெண்கலக் கால தொல்பொருள் பண்பாடு / From Wikipedia, the free encyclopedia
சிந்தசுதா பண்பாடு (Sintashta culture)[lower-alpha 1] என்பது ஒரு நடு வெண்கலக் கால தொல்பொருள் பண்பாடு ஆகும். இது தெற்கு உரால் மலைகளில் அமைந்திருந்தது.[1] இதன் காலம் அண். 2200-1900 பொ. ஊ. மு. ஆகும்.[2][3] சிந்தசுதா-பெத்ரோவுகா வளாகம் என்று அழைக்கப்படுவதன் முதல் படி நிலை இதுவாகும். இவ்வளாகத்தின் காலம் அண். 2200-1750 பொ. ஊ. மு. ஆகும். உருசியாவின் செல்யாபின்சுக் மாகாணத்தின் சிந்தசுதா தொல்லியல் களத்தின் பெயரானது இந்த பண்பாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரன்பூர்க் மாகாணம், பாஷ்கொர்டொஸ்தான், மற்றும் வடக்கு கசக்கிசுத்தான் பிராந்தியம் ஆகியவற்றிலும் பரவியிருந்தது. திண் கயிறு மட்பாண்ட பண்பாட்டில் இருந்து மக்கள் கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்ததை இந்த சிந்தசுதா பண்பாடு பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக எண்ணப்படுகிறது.[4][5][6][7] இந்திய-ஈரானிய மொழிகள்[8][9][10][11][12] தோன்றிய இடமாக இது பொதுவாக கருதப்படுகிறது. இம்மொழிகளைப் பேசியவர்கள் தங்களை ஆரியர் என்று அழைத்தனர்.[13][14] சிந்தசுதா சமாதிகளில் தொடக்க காலத்தில் அறியப்பட்ட தேர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர் தொழில்நுட்பத்தின் தொடக்கத்திற்கான ஒரு வலிமையான காரணமாக இப்பண்பாடானது கருதப்படுகிறது. தேர் தொழில்நுட்பமானது இங்கிருந்து பழைய உலகம் முழுவதும் பரவியது. பண்டைக் கால போர் முறையில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியது.[15][16][17][18] சிந்தசுதா குடியிருப்புகள் செப்பை சுரங்கம் மூலம் தோண்டி எடுத்தால் மற்றும் இங்கு செய்யப்பட்ட வெண்கல உலோகவியலின் அழுத்தமான செயல்பாடுகளுக்காகவும் தனித்துவமாக உள்ளது. ஒரு ஸ்டெப்பி புல்வெளி பண்பாட்டுக்கு இது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும்.[19] சிந்தசுதா பண்பாட்டின் முக்கியமான அம்சங்களில் அதிக பட்ச இராணுவத் தன்மை மற்றும் விரிவான கோட்டை குடியிருப்புகள் உள்ளன. இவ்வாறாக 23 குடியிருப்புகள் அறியப்பட்டுள்ளன.[20]
சிந்தசுதா பண்பாடு | |
---|---|
காலப்பகுதி | பிந்தைய நடு வெண்கலக் காலம் |
காலம் | 2200–1900 பொ. ஊ. மு. |
வகை களம் | சிந்தசுதா |
முக்கிய களங்கள் | சிந்தசுதா அர்கைம் பெத்ரோவுகா |
இயல்புகள் | விரிவான செப்பு மற்றும் வெண்கல உலோகவியல் கோட்டைக் குடியிருப்புகள் நுட்பமான ஆயுத சமாதிகள் தொடக்க காலத்தில் அறியப்பட்ட தேர்கள் |
முந்தியது | திண் கயிறு மட்பாண்டப் பண்பாடு போல்தவுகா பண்பாடு அபசேவோ பண்பாடு |
பிந்தியது | அன்ட்ரோனோவோ பண்பாடு, சுருபுனயா பண்பாடு, சௌரோமதியர் |