கில்லெர்மோ டெல் டோரோ
From Wikipedia, the free encyclopedia
கில்லெர்மோ டெல் டோரோ (ஆங்கில மொழி: Guillermo del Toro Gómez) (எசுப்பானியம்: [ɡiˈʝeɾmo ðel ˈtoɾo]; பிறப்பு அக்டோபர் 9, 1964) ஒரு மெக்சிக திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் கதாசிரியர் ஆவார். ஆசுக்கர் விருதுகள் வென்ற பான்சு லாப்ரின்த் (2006) மற்றும் த சேப் ஆஃப் வாட்டர் (2017) ஆகிய திரைப்படங்களை இயக்கியதிற்காக அறியப்படுகிறார். சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய ஆசுக்கர் விருதுகளை வென்றுள்ளார் குங் பூ பாண்டா 3 (2016) திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.
கில்லெர்மோ டெல் டோரோ Guillermo del Toro | |
---|---|
2017 இல் கில்லெர்மோ டெல் டோரோ | |
பிறப்பு | கில்லெர்மோ டெல் டோரோ கோமெசு Guillermo del Toro Gómez[1] அக்டோபர் 9, 1964 (1964-10-09) (அகவை 59) குவாதலஹாரா, ஜலிசுகோ, மெக்சிக்கோ |
தேசியம் | மெக்சிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | குவாட்லஹாரா பல்கலைக்கழகம் |
பணி | திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் கதாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | லொரென்சா நியூட்டன் [2][3](தி. 1986; ம.மு. 2017) |
பிள்ளைகள் | 2 |
கையொப்பம் |
இவரின் திரைப்படங்கள் பெரிதும் விசித்திரக் கதைகள் மற்றும் திகில் புனைவுகள் ஆகும்.[4][5] மெக்சிக திரைப்படத் தயாரிப்பாளர் அல்போன்சா குயூரான் மற்றும் அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு ஆகியோர் இவரின் நண்பர்கள் ஆவர். கூட்டாக இவர்கள் த திரீ அமீகோசு ஆஃப் சினிமா என்று அழைக்கப்படுகின்றனர்.[6]