கான் சந்தை
From Wikipedia, the free encyclopedia
கான் சந்தை (Khan Market), என்பது 1951 இல் நிறுவப்பட்டது. இது, சுதந்திர போராளி கான் அப்துல் ஜபார் கானின் நினைவாக பெயரிடப்பட்டது. இது 2007 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த சில்லறை வியாபாரத்தின் இருப்பிடமாக மதிப்பிடப்பட்டுள்ளது. [1] 2019 ஆம் ஆண்டில், அசையாச் சொத்து வணிக நிறுவனங்களால் இது உலகின் 20 ஆவது மிக விலையுயர்ந்த சில்லறை வணிகத் தெருவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இது, அதே நிறுவனத்தால் உலகின் 20 வது மிக விலையுயர்ந்த சில்லறை வியாபார உயர் தெருவாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு குஷ்மேன் & வேக்ஃபீல்ட் கணக்கெடுப்பு கான் சந்தையை உலகின் 21 வது மிக விலையுயர்ந்த விற்பனை செய்யும் தெருவாக மதிப்பிட்டது. [2]