காசுட்கோ
From Wikipedia, the free encyclopedia
காசுட்கோ மொத்த விற்பனை நிறுவனம் உறுப்பினருக்கு மட்டுமே பொருட்களை விற்கும் அமெரிக்க கிடங்கு மன்றம் ஆகும். 2015 காலம் வரை அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய உறுப்பினர்-மட்டுமே வகை கிடங்கு மன்றம் ஆகும்[3] உலகளவிலான இரண்டாவது மிகப்பெரிய சில்லரை விற்பனையாளர். (வால்மார்ட் நிறுவனம் முதலாவது).[4]
வகை | பொது |
---|---|
முந்தியது | பிரைசு மன்றம் |
நிறுவுகை | சூலை 12, 1976; 47 ஆண்டுகள் முன்னர் (1976-07-12) (பிரைசு மன்றம் என அறியப்பட்டது) [சான் டியேகோ], கலிபோர்னியா, அமெரிக்கா செப்டம்பர் 15, 1983; 40 ஆண்டுகள் முன்னர் (1983-09-15) (காசுட்கோ என அறியப்பட்டது) சியாட்டில், Washington, அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | கனடா, மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான், தென் கொரியா, தைவான், அவுத்திரேலியா, எசுப்பானியா, லெபனான் |
முதன்மை நபர்கள் | செப்ரீ பிராட்மன் (Chairman) James Sinegal (Founder) W. Craig Jelinek (President and CEO) |
தொழில்துறை | சில்லரை வணிகம் |
சேவைகள் |
|
வருமானம் | ஐஅ$116.199 billion (2015)[1] |
நிகர வருமானம் | ஐஅ$2.377 billion (2015) |
மொத்தச் சொத்துகள் | ஐஅ$33.44 billion (2015)[1] |
மொத்த பங்குத்தொகை | ஐஅ$10.61 பில்லியன் (2015)[1] |
பணியாளர் | 117,000[2] |
காசுட்கோவின் உலகளாவிய தலைமையகம் இச்சாகுவா , வாசிங்டன் என்னுமிடத்தில் உள்ளது. இந் நிறுவனத்தின் முதல் கிடங்கு மன்றம் (கடை) 1983 இல் சியாட்டில் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. பல நிறுவனங்களை தன்னுடன் சேர்த்த நடவடிக்கை மூலமாக , கோசுட்கோவின் ஒட்டுமொத்த வரலாறு 1976 ஆண்டில் இருந்து ஆரம்பமாகிறது. இதன் முன்னால் போட்டியாளர் விலை மன்றம் 1976இலேயே சான் டியேகோ, கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.
As of 1 சூலை 2016[update], கால அளவில் காசுட்கோ 705 கிடங்குகளை (கடை) கொண்டிருந்தது. அவற்றில் அமெரிக்கா (493), கனடா (90), மெக்ஸிக்கோ (36), ஐக்கிய ராஜ்யம் (27), ஜப்பான் (25), தென் கொரியா (12), தைவான் (12), ஆஸ்திரேலியா (8), ஸ்பெயின் (2) [5][6] மற்றும் லெபனான் (2) நாடுகளில் இருந்தன.[7]