கத்தி
From Wikipedia, the free encyclopedia
கத்தி (ஒலிப்புⓘ) (knife) என்பது வெட்டுவதற்குப் பயன்படும் கருவி ஆகும். வெட்டும் கூர்மையான பாகமும் பிடியும் கொண்டதாகக் கத்திகள் அமைந்திருக்கும். கற்காலத்திலிருந்து கத்திகள் ஆயுதங்களாகவும் பயன்பட்டு வருகிறது. நவீன கருவிகளின் வரவால், கத்தியின் ஆயுதப் பயன்பாடு குறைந்து வருகிறது. இது சமையலில் முக்கிய இடம் பெறுகிறது. தேவைகளைப் பொறுத்துப் பல அளவுகளிலும் கத்திகள் தயாரிக்கப்படுகின்றன. கத்தி தயாரிக்கும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
முற்காலத்தில், பாறை, எலும்பு, தீக்கல் உள்ளிட்டவற்றால் கத்தி செய்யப்பட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், வெண்கலம், செப்பு, இரும்பு, எஃகு, பீங்கான், தைட்டானியம் ஆகியவற்றிலும் கத்தி செய்யப்படுகிறது. பல்வேறு பண்பாடுகளில் கத்தியின் பயன்பாடு காணப்படுகிறது. மனிதன் முதன்மை கண்டுபிடிப்புகளில் கத்தியும் ஒன்று. இதனால், பண்பாடு, சடங்குகளில் கத்தி முக்கிய இடம் பிடிக்கிறது.[1]