இரைப்பை
From Wikipedia, the free encyclopedia
இரைப்பை (Stomach) என்பது முதுகெலும்பிகள், பூச்சிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள் உள்ளிட்ட விலங்குகளின் சமிபாட்டுத் தொகுதியில் மிக முக்கியமான சமிபாட்டை நிகழ்த்தும் ஓர் அகன்ற அறையாகும். இது உணவுக்குழாய் (அல்லது களம்) (Oesophagus), சிறுகுடல் ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. உதரவிதானத்திற்குக் (Thoracic diaphragm) கீழாக உள்ளது. இதன் வடிவமும் அளவும் உள்ளிருக்கும் உணவின் அளவினைப் பொறுத்து அமையும். உணவு உள்நுழையும் வேளையில் அதிகபட்சமாக 1.5 லிட்டர் அளவிற்குப் பெரிதாகும். இரைப்பையின் இயக்கம் குடல் அலைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு அலைவும் இரைப்பையின் மைய உடற்பகுதியிலிருந்து தோன்றிப் பின்னோக்கிச் செல்லும். பின்னோக்கிச் செல்லும் முதல் அலைவு இரைப்பைக்கும், சிறுகுடலின் தொடக்கப் பகுதியான முன்சிறுகுடல் (Duodenum) பகுதிக்கும் இடையில் உள்ள பைலோரஸ் சுருக்குத் தசைகளைச் சுருங்கச் செய்யும். இரைப்பையின் உள்சுவற்றில் பல இரைப்பை நீர்ச் சுரப்பிகள் உண்டு. ஏறக்குறைய 40 மில்லியன் நுண்ணிய சுரப்பிகள் உள்ளன. இவற்றில் முதன்மையான உயிரணுக்கள் (chief cells) நொதிகளையும், சுவர் உயிரணுக்கள் (parietal cells) எனப்படும் ஆக்ஸின்டிக் (Oxyntic) உயிரணுக்கள் ஐதரோகுளோரிக் காடியையும் (HCl) சுரக்கின்றன. ஐதரோகுளோரிக் காடியினால் நொதியச் செயல்பாட்டிற்கு தேவையான அமிலத்தன்மை கிடைக்கிறது. இரைப்பையின் பெப்சின், ரெனின் போன்ற நொதியங்கள் சுரக்கப்படுகிறன.
இரைப்பை | |
---|---|
உடலில் இரைப்பையின் அமைவிடம் | |
Diagram from cancer.gov: * 1. இரைப்பையின் உடல் * 2. அடிக்குழி * 3. வெளிச்சுவர் * 4. பெரிய வளைவு * 5. சிறிய வளைவு * 6. இதயத் துவாரப் பகுதி * 9. குடல் வாயிறுக்கி * 10. குடல் வாய்ப்பகுதி * 11. குடல் வாய் * 12. கோண முடிச்சு * 13. இரைப்பைக் குழாய் * 14. மடிப்புகள் | |
இலத்தீன் | Ventriculus |
கிரேயின் | |
நரம்பு | celiac ganglia, vagus[1] |
நிணநீர் | celiac preaortic lymph nodes[2] |
ம.பா.தலைப்பு | இரைப்பை |