இரதம்
From Wikipedia, the free encyclopedia
இரதம்(ஒலிப்புⓘ) (ஆங்கிலம்:Chariot) என்பது இழுத்துச் செல்லப்படும் ஒருவகை வண்டியாகும். பெரும்பாலும் குதிரைகளைக் கொண்டே இழுத்துச் செல்லப்படுகிறது. அக்கால இராணுவத்தில் வில்வித்தை, வேட்டை போன்றவற்றிற்கு வாகனமாகவும், போக்குவரத்திற்கும் பண்டைய காலத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
ஆங்கிலத்தில் சாரட் (chariot) என்பது இலத்தீன் சொல்லான காரஸ் என்ற சொல்லிருந்து உருவானது. இராணுவ அணிவகுப்பில் இரத அணிவகுப்பும் ஒன்றாகும். பண்டைய ரோம் மற்றும் இதர பண்டைய நாடுகளில் இரு குதிரை பூட்டிய ரதம், முக்குதிரை பூட்டிய ரதம், நான்கு குதிரை பூட்டிய ரதம் என்றெல்லாம் இருந்துள்ளது.
குதிரை இரதம் என்பது வேகமான, எடைகுறைவான, திறந்த, இருசக்கரம் கொண்ட கலனை இரண்டு அல்லது மூன்று குதிரை கொண்டு இழுத்துச் செல்லும் அமைப்புடையது. பண்டைய வெண்கலக் காலம் மற்றும் இரும்புக் காலத்தில் போர்க்களத்தில் பயன்பட்டுவந்தது, பின்னர் படிப்படியாகப் பயணவாகனமாகவும், அணிவகுப்பு வாகனமாகவும், தேர்ப் பந்தயத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. கிபி முதலாம் நூற்றாண்டு கான்ஸ்டண்டினோபில் காலத்தில் இராணுவ முக்கியத்துவத்தையும் தாண்டி தேர்ப் பந்தயம் ஆறாம் நூற்றாண்டு வரை புகழ்பெற்றிருந்தது.