அமெரிக்கப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
அமெரிக்கன் பல்கலைக்கழகம் (அல்லது ஏயூ) வாஷிங்டன், டி.சி., அமெரிக்காவில் ஒரு தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக்கழக பாடத்திட்டம் மதச்சார்பற்றது என்றாலும், அது, மெத்தடிஸ்ட் தேவாலயம் இணைந்ததாகும்.[1]அமெரிக்க ஜனாதிபதி பெஞ்சமின் ஹாரிசன் "அமெரிக்கன் பல்கலைக்கழகம்" என்று ஒரு பல்கலைக்கழக தொடங்க பிப்ரவரி 24, 1893 அன்று ஒரு மசோதாவை சமர்ப்பித்தார். [2][3]
2008, 2010 மற்றும் 2012 ல், அமெரிக்காவில் மிக உயர்ந்த அரசியல் ஈடுபாடு கொண்ட பள்ளி என்று ஏயூ பெயரிடப்பட்டது[4]
இப்பல்கலைக் கழகத்தில் 6 பள்ளிகள் உள்ளன. அதில், சர்வதேச சேவை பள்ளி (School of International Service - SIS) யின் முதுகலைப் பட்டம் உலகின் 8 வது இடத்திலும், இளநிலை பட்டம் 9 வது இடத்திலும் இருப்பதாக ஃபொரீன் பொலிசி இதழில் பாராட்டப்பட்டுள்ளது.[5][6]
2016 ல், சுமார் 7.710 இளநிலை பட்டம் மாணவர்கள் மற்றும் 5,230 முதுகலை பட்டம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.[7]
ஏயூவின் விளையாட்டு அணிகள் அமெரிக்கன் பல்கலைக்கழக ஈகள்ஸ் அல்லது ஏயூ ஈகள்ஸ் (AU Eagles) என்று அழைக்கப்படுகின்றன.