அமிருதசரசு
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பெருநகரம் / From Wikipedia, the free encyclopedia
அமிருதசரசு (பஞ்சாபி: ਅੰਮ੍ਰਿਤਸਰபஞ்சாபி உச்சரிப்பு: [əmːˈɾɪtsəɾ] (கேட்கⓘ), Amritsar, அம்ரித்ஃசர்), அமிருதசரசு இந்தியாவின் பஞ்சாபு மாநிலத்தில் அமைந்துள்ள அமிருதசரசு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். வரலாற்றின்படி இராம்தாசபூர் என்றும் பேச்சு வழக்கில் அம்பர்சர் என்றும் அறியப்படுகிறது. இது இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது பஞ்சாப் மாநிலத்தின் மஜ்ஹா பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில் உள்ளது. இந்நகரம் சண்டிகர் தலைநகருக்கு 217 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது பாகிஸ்தானுக்கு மிக அருகில் உள்ளது.இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் அமிருதசரசு ਅੰਮ੍ਰਿਤਸਰ (பஞ்சாபி மொழி), நாடு ...
அமிருதசரசு
ਅੰਮ੍ਰਿਤਸਰ (பஞ்சாபி மொழி) | |
---|---|
அடைபெயர்(கள்): புனைப்பெயர்கள்
| |
ஆள்கூறுகள்: 31.64°N 74.86°E / 31.64; 74.86 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | அமிருதசரசு |
தோற்றுவித்தவர் | குரு ராம் தாஸ் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | அமிருதசரசு மாநகராட்சி |
• மாநகர முதல்வர் | கரம்சித் சிங் இரிந்து (ஆ.ஆ.க.) |
• துணை ஆணையர் | குர்ப்ரீத் சிங் கைரா[1] |
பரப்பளவு | |
• மாநகரம் | 240 km2 (90 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | பஞ்சாபில் 2-ஆவது இடம் |
மக்கள்தொகை (2011) | |
• மாநகரம் | 15,83,961 |
• அடர்த்தி | 6,600/km2 (17,000/sq mi) |
• பெருநகர் | 19,93,809 |
• மெட்ரோ தரவரிசை | 44-ஆவது |
இனம் | அமிர்தசரியா/அம்பர்சாரியா/அமிர்தசாரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 143 001 |
தொலைபேசிக் குறியீடு | 91 183 XXX XXXX |
வாகனப் பதிவு | PB-01 (வணிக வாகனங்கள்), PB-02 |
இணையதளம் | www |
மூடு