அடுக்குத் தூபி
கிழக்கு ஆசிய வடிவமைப்பை சார்ந்த அடுக்கு தூபி கட்டிடம் / From Wikipedia, the free encyclopedia
அடுக்குத் தூபி (Pagoda), பௌத்தக் கட்டிடக் கலை நயத்தில் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளில் பல அடுக்கு மாடிகள் கொண்ட தூபி [1][2][3] வடிவத்தில் கட்டப்பட்ட பௌத்த வழிபாட்டுத் தலமாகும்.[4][5] நேபாளம், இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், பர்மா, இலங்கை, லாவோஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இதுபோன்ற அடுக்குத் தூபிக்கள் விகாரைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.